Tuesday, August 16, 2011

குருவே சரணம்

“மீன் குட்டிக்கு  நீந்த கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை” ஏணெனில் அவை இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. அவை மட்டுமல்ல மனிதனைத் தவிர ஏணைய அனைத்து ஜீவராசிகளும் இயற்கையோடு இயற்கையாகவே வாழ்கின்றன அவைகளுக்கு ஒரு குரு அவசியமில்லாமல் இருக்கலாம், ஆனால் ஐந்து அறிவு மட்டுமில்லாமல் ஆறாவது அறிவும் கொண்ட மனிதனுக்கு குரு மிகவும் அவசியம்.

காரணம்
1.   எந்த ஒரு விஷயத்திலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு அதுபோல் இந்த உலக சமுதாய நன்மை பொருட்டு எதையும் சாதிக்கும் அபரிமிதமான ஆற்றல் படைத்த மனிதனின் ஆறவது அறிவு அதற்கு  நேர் எதிரான இந்த உலகை அழிக்கும் செயலையும் செய்யும். பரந்த சிந்தனையாக உலகைப்பற்றி சிந்திக்கிரமோ  இல்லையோ குருகிய சிந்தனையாக நம்மைப்பற்றி  நம் குடும்பத்தைப் பற்றியேனும் நாம் சிந்தித்தாக வேண்டும். ஆக நம் குடும்பம் வளமோடும் நிம்மதியோடும் பிரச்சினை இல்லாமல் வாழ நம்மை வழி காட்டி அழைத்துச்செல்லும் குரு  நமக்கு தேவை.
2.   ஒரு குழந்தை இந்த உலகில் ஜனிக்கிறது (நீங்கலோ அல்லது நானோ) அந்தக் குழந்தைக்கு இந்த உலகில் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்தால் என்னவாகும், அப்படி  இருந்திருந்தால் இன்று உங்களுடைய நிலைமையோ, என்னுடைய நிலைமையோ என்னவாக இருந்திருக்கும், தாயோ தந்தையோ அண்ண்னோ, தம்பியோ, ஆசிரியரோ தெரிந்தவரோ தெரியாதவரோ இதுவரையில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ நம்மை வழி நடத்தி அழைத்து வந்துள்ளனர்.  இதில் யார் எப்போது வருவார் யார் எப்போது துணை இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் நம்மை வழி  நடத்த  நம்மை விட விஷயம்  நன்கு அறிந்தவரே தேவை.  ஆலை இல்லாத ஊறுக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல, குரு இல்லாத குறைக்காக நம் சுற்றத்தார் நமக்கு வழிகாட்டி உதவி இருக்கிறார்கள்.  நம் வீட்டில் மின் விளக்கு பழுதடைந்தால் தற்காலிகமாய் மெழுகை ஏற்றுவோம். ஆனால் மெழுகையே  நம்பி வாழ்ந்திடாமல் மின் விளக்கை சரி செய்வது போல்,    நம் குருவை தேர்ந்தெடுத்து அவர் வழி நடப்பது உத்தமம்.

1 comment:

  1. காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே-"ஆத்மதரிசனம்". இந்த காரண குருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார். கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.

    காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே-"ஆத்மதரிசனம்". இந்த காரண குருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார். கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.


    http://sagakalvi.blogspot.in/2011/12/blog-post_01.html

    ReplyDelete