Tuesday, August 23, 2011

குரு என்ன தருவார் ?




குரு கற்றுத்தருவார்,

ஒரு சிறிய கதை: 
ஒருவன் கடும் பசியோடு ஆற்றோரமாய்ச் சென்று கொண்டிருந்தான் அங்கு ஒரு பெரியவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார் அவரிடம் சென்றவன் "ஐயா நான் பெரும் பசியில் உள்ளேன் எனக்கு சில மீன்கள் தந்தீர்களானால் நான் பசியாருவேன் என்றான்" அதற்கு அந்த பெரியவரோ "நான் தரும் இந்த மீன்கள் உன்னுடைய ஒரு வேலை பசியை மட்டுமே தீர்க்கும் சில மணிநேரம் கழித்து பசி எனும் பிணி உன்னை விரட்டும் ஆகவே உனக்கு நான் மீன் பிடிக்க கற்றுத்தருகின்றேன் இதைக்கொண்டு நீ உன் கடைசி நாள்வரை சங்கடமின்றி வாழலாம்" என பெரியவர் மீன்பிடிக்கக் கற்றுத்தந்தார்,

அதுபோல....


அன்பான மனைவி இருந்தும் அவள் அருமை தெரியாமல்......... 
அழகான வாரிசு இருந்தும் அதை சரியாக வளர்க்க முடியாமல்........... 
முத்தான கல்வி இருந்தும் அதில் முனைப்பு இல்லாமல்..........
சிறப்பான வேலை இருந்தும் அதில் சிறக்கத்தெரியாமல்.............
வார்த்தை இருந்தும் அதை வடிக்கத்தெரியாமல்..........
தன்னுள் திறமை இருந்தும் அதை திறக்கத்தெரியாமல்.......... 
மாடிருந்தும், காடிருந்தும், வீடிருந்தும், உலக விஷயமிருந்தும்.........
எல்லாம் தன்னிடம் இருந்தாலும், இல்லாமல் போனாலும்,
நிம்மதியை என்கோத  தேடித்தேடி தெரியாமல்..........

மொத்தத்தில்..........
வாழத்தெரியாதவர்களுக்கு வாழ கற்றுக்கொடுப்பார். 


அவரே குரு 

Tuesday, August 16, 2011

குருவே சரணம்

“மீன் குட்டிக்கு  நீந்த கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை” ஏணெனில் அவை இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. அவை மட்டுமல்ல மனிதனைத் தவிர ஏணைய அனைத்து ஜீவராசிகளும் இயற்கையோடு இயற்கையாகவே வாழ்கின்றன அவைகளுக்கு ஒரு குரு அவசியமில்லாமல் இருக்கலாம், ஆனால் ஐந்து அறிவு மட்டுமில்லாமல் ஆறாவது அறிவும் கொண்ட மனிதனுக்கு குரு மிகவும் அவசியம்.

காரணம்
1.   எந்த ஒரு விஷயத்திலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு அதுபோல் இந்த உலக சமுதாய நன்மை பொருட்டு எதையும் சாதிக்கும் அபரிமிதமான ஆற்றல் படைத்த மனிதனின் ஆறவது அறிவு அதற்கு  நேர் எதிரான இந்த உலகை அழிக்கும் செயலையும் செய்யும். பரந்த சிந்தனையாக உலகைப்பற்றி சிந்திக்கிரமோ  இல்லையோ குருகிய சிந்தனையாக நம்மைப்பற்றி  நம் குடும்பத்தைப் பற்றியேனும் நாம் சிந்தித்தாக வேண்டும். ஆக நம் குடும்பம் வளமோடும் நிம்மதியோடும் பிரச்சினை இல்லாமல் வாழ நம்மை வழி காட்டி அழைத்துச்செல்லும் குரு  நமக்கு தேவை.
2.   ஒரு குழந்தை இந்த உலகில் ஜனிக்கிறது (நீங்கலோ அல்லது நானோ) அந்தக் குழந்தைக்கு இந்த உலகில் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்தால் என்னவாகும், அப்படி  இருந்திருந்தால் இன்று உங்களுடைய நிலைமையோ, என்னுடைய நிலைமையோ என்னவாக இருந்திருக்கும், தாயோ தந்தையோ அண்ண்னோ, தம்பியோ, ஆசிரியரோ தெரிந்தவரோ தெரியாதவரோ இதுவரையில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ நம்மை வழி நடத்தி அழைத்து வந்துள்ளனர்.  இதில் யார் எப்போது வருவார் யார் எப்போது துணை இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் நம்மை வழி  நடத்த  நம்மை விட விஷயம்  நன்கு அறிந்தவரே தேவை.  ஆலை இல்லாத ஊறுக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல, குரு இல்லாத குறைக்காக நம் சுற்றத்தார் நமக்கு வழிகாட்டி உதவி இருக்கிறார்கள்.  நம் வீட்டில் மின் விளக்கு பழுதடைந்தால் தற்காலிகமாய் மெழுகை ஏற்றுவோம். ஆனால் மெழுகையே  நம்பி வாழ்ந்திடாமல் மின் விளக்கை சரி செய்வது போல்,    நம் குருவை தேர்ந்தெடுத்து அவர் வழி நடப்பது உத்தமம்.