Saturday, January 11, 2014

குரு நம்மை எப்படி மாற்றுவார் ?

வெட்டுக்கிளி தாவித்தாவிச்செல்லும்  இயல்பைஉடையது பிள்ளைப்  பூசசியோ தொடர்ந்து பறக்க இயலாதது, ஆகவே  இவைகள் ஒரு இலக்கை அடைய விரும்பினாலும் அதை  அடைவதற்கு சற்றே சிரமமும் கால தாமதமும் ஏற்படுகிறது இதை போன்றதே இறைவனை அடையவிரும்பும் ஒரு பக்தனின் நிலையும்கூட,    இடைவிடா முயற்சியே வெற்றியை கொடுக்கும்  மேற்கூறிய வெட்டுகிலியோ இடைவெளிவிட்டு இடைவெளிவிட்டு தாவகூடியது , பில்லைப்பூச்சியோ தொடர்ந்து பறக்கமுடியாமல் நடப்பதையே பிரதானமாகக்கொண்டது  இவைகள் பறக்கவேண்டும் தொடர்ந்து பறக்கவேண்டும்    இயல்பை   மீறி பறக்கவேண்டும் முடியுமா? முடியும் குரு நினைத்தால் முடியும்.,

                 ஒரு உதவி இயக்குனர் ஆகவேண்டுமென்றால் இயக்குனரை இடைவிடாமல் வேலைகேட்டு  தொடரவேண்டும் 

                 ஒரு பணிக்குச்சென்றாலும்கூட  பணியில் நிரந்தரமாகவேண்டுமென்றால்  இடைவிடாது   வேலைக்குச்செல்ல வேண்டும் 

                  அவ்வளவு ஏன் தனது காதலியின் மனதை கவர வேண்டுமாணாளும்கூட  இடைவிடாது       அவளை  தினமும் சந்தித்து அவள் மனம் கவரவேண்டும் நான்குநாள் இடைவெளி விட்டாலும்  நடுவில் ஒருவன் புகுந்து அவள் மனம் கவர்ந்து சென்றுவிடுவான்,  பகவான்  
ஸ்ரீ இராமகிருஷ்ண   பரமஹம்சர்    இறைவனை வணங்குவது இடைவிடாத என்னை ஒழுக்கைப்போன்றிருக்கவேண்டும் அப்படி ஒருவன் தியாநித்தாநேயானால் அவன் மூன்று தினங்களில் இறைவனைக்காணலாம்' என்கிறார் 

                   இப்படி இடை விடாமல் பறப்பதெப்படி? அப்போதுதான் குலவியைப்போன்று குரு அங்கே வருகிறார் [குருவென்பவர் நம் கவண்த்திற்கு வருகிறார்] அவரிடம் சரண் புகுந்தால் அவர் நம்மை லாவகமாகத்தூக்கிச்சென்று குலவி எப்படி வெட்டுக்கிளியையும், பில்லைப்பூச்சியையும்   கொட்டி கொட்டி தன்னைப்போன்ற திடமாய், தீர்க்கமாய், இடைவிடாது பறக்கும்படி செய்கின்றதோ அதுபோல மாற்றுகிறார் 

 நம்மை சீடனாய் ஏற்ற குரு என்ன செய்வார்?

குலவியின்  ரீங்காரமாய் குருவின் மந்திர உபதேசம்' அருணகிரிநாதன் என்ற சீடருக்கு குருவாய் வந்த முருகன் சொன்னதுபோல் 'சொல்லற சும்மா இரு' என்பதே நாம் செய்யவேண்டியதெல்லாம் எதையுமே செய்யக்கூடாது என்பதைத்தான் செய்யவேண்டும்,

                   நாம் ஒரு நோயாளியைப்போன்று இருக்கவேண்டும் குருவே மருத்துவராக செயல்படுவார், மயக்க மருந்தை தரவேண்டுமா கூடாதா என்பதையும் மருத்துவரே முடிவு செய்வார்  என்னால் வலி பொறுக்கமுடியவில்லை  எனக்கு மயக்க மருந்தை கொடுங்கலென்றால் பிள்ளைதான் பெறுவதெப்படி இதுவரை பட்ட கஷ்டம் வீன்போகுமன்றோ?

                    சீடனாவதும் எளிதானதல்ல ஒரு சிற்பி பத்து கல்லைப்பார்த்து அதில் ஒன்றையே இது சிலை செய்யத்தகுதியானதென தீர்மானிக்கிறார் அதில் உளியையும் சுத்தியலையும் கொண்டு அடித்து சிலை வடித்துமுடித்த பின்னரே அவை கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது பிறகு அதற்கு பால் அபிஷேகமென்ன தேன் அபிஷேகமென்ன ஆனால்  அந்த பத்தில் ஒன்றாய் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கல்லும் உளியின் செதுக்களை சகிக்கமுடியாமல் உடைந்துபோனால் அது சிலை அல்ல வெறும் கல் கடைசியில் அது கட்டிடம் கட்டவும் உதவாமல் போய்விடும் ஆகவே குருவை நெருங்கும்வரை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகலாம் குருவாய் ஒருவரை ஏற்றபின் கட்டுப்பாடு அவசியம், நெருப்பாரும், மயிர்ப்பாலமும் இங்கிருந்தே தொடங்குகிறது,  
சும்மா இருப்பது எளிதல்ல ஆனால் நாம் சும்மா இருந்துவிட்டால் போதும் மற்றனைத்தும் குரு பார்த்துக்கொள்வார்,
                   
                   கடைசியில் பில்லைப்பூச்சி குலவி ஆவதைப்போல் அறிவீளியாக  இருப்போறை தன்னைப்போல் அறிவாளியாக்குவார் குரு என்பது திண்ணம்.


.