Wednesday, October 12, 2011

குரு வாழக்கற்றுத்தருவாரா? நாங்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றோம் 

ஆம் நாம் வாழ்துகொண்டுதான் இருக்கின்றோம் 
இல்லை அவ்வாறு நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். 

"அதோ போறான் பார்ரா அவன் வாழதுதாண்டா வாழ்க்கை நாம வாழதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா"
இப்படி யாராவது சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம், எப்படிப்பட்டவர் இதைப்போல கூரி இருப்பாரென்றால் வாழ்க்கையில் நொந்தவர், தனது வாழ்க்கை சரியில்லை என உணர்தவர், உணர்ந்து அந்த உண்மையைத்        தெரிந்தவர். 
நாம் அந்த உண்மையைத் தெரிந்து கொண்டாலும் தெரியாமலிருந்தாலும் உண்மை என்பது அதுதானே. 

சர் ஐசக் நியுடன் புவியீர்ப்பு விசையைக்கண்டு பிடித்தார், அப்படியென்றால் அவர் கண்டுபிடிப்பதற்கு முன்னாள் புவியீர்ப்பு விசை இல்லாமலா இருந்தது. இல்லை அதை நாம் அறியாமலிருந்தோம், அதுபோலத்தான் நாம் சரிவர வாழவில்லை என்பதையும் அறியாது வாழ்கிறோம். 

அப்படியெனில் நாம் வாழ்க்கை என நினைப்பது? 
ஒரு கிணற்றில் வாழும் தவளை, இந்த கிணறுதான் உலகம் என்றும் இதில் உள்ள நீரே கடல் என்றும், இதற்குமேல் ஒன்றுமே இல்லை என்பதாக எண்ணி வாழ்கிறது. ஏனெனில் அது வெளியுலகத்தை அறிந்திருக்கவில்லை என்பதே காரணம், அதுபோல உண்மையான வாழ்க்கை என்ன என்பதை அறியாதவரையில் நாம் வாழ்வதே சரியான வாழ்க்கை என எண்ணுவது இயல்பு.,

சென்றவனைக்கேட்டால் வந்துவிடு என்பான் 
வந்தவனைக்கேட்டால் சென்றுவிடு என்பான் 
                                                                - கவியரசு கண்ணதாசன் 

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையைப்பற்றிய கருத்துக்கள் வெவ்வேறாகவே இருந்துகொண்டிருக்கின்றது,
வாழ்க்கையைப்பற்றிய நமது பார்வை எப்படிப்பட்டது ?
     
ஒரு கதை;
     
(உங்களுக்கும் தெரிந்திருக்கும்,)
பார்வையற்ற நால்வர் யானையைத்தொட்டுப்பார்த்து யானையின் உருவத்தை தெரிந்துகொண்டார்கலாம் 
வாளைத்தொட்டவன் யானை கயிறுபோல் உள்ளது என நினைத்தானாம், காலைத் தொட்டவன் யானை தூணைப்போல உள்ளது என நினைத்தானாம்,  துதிக்கையைத்தொட்டவன் யானை உலக்கையைப்போல் உள்ளது என நினைத்தானாம் தந்தத்தைத்தொட்டுப்பார்த்தவன் யானை பளிங்குபோல உள்ளது என என்னினானாம், அதைப்போன்றதுதான் வாழ்க்கையைப்பற்றிய நமது எண்ணங்களும்,
        

கடவுள் ஒருநாள் உலகைக்கான தனியே வந்தாராம் 
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம் 

ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான் 
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்
                                                           - கவியரசு கண்ணதாசன்

படைத்தவன் ஏன் சிரிக்கின்றான் 

உண்மை என்பது ஒன்றுதான், அதை அறிவதில் நமக்குள் ஏன் இந்த மாறுபாடு, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏன் இந்த வேறுபாடு ஏனெனில் பொய் ஒரே எண்ணிக்கையில் இருப்பதில்லை,

வேலை விஷயமாய் வெளியூர் வந்த நேரத்தில் வீட்டிலிருந்து அவசர அழைப்பு, அதில் பதட்டத்துடன் பேசும் தாய், நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா நா......... மேற்க்கொண்டு பேசுவதற்குள் அலைவரிசை கிடைக்காததால் அலை பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது, மீண்டும் முயற்சி செய்தாலும் தொடர்பு கிடைக்கவில்லை, இவரது மனதில் என்ன ஓடும் 

உடல் நலம் சரி இல்லாத தந்தைக்கு என்ன ஆனதோ..........?
கல்லூரிக்குபோன மகள் திரும்பி வந்தாலோ இல்லையோ .............?
கொபக்காரமனைவி யாருடன் சண்டை போட்டாலோ .............?
இதுதானா இல்லை இன்னும் இருக்கின்றதா? அது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது இவர் மனம் எவ்வளவு வரிசைப்படுத்தினாலும் உண்மை என்னவோ ஒன்றுதான், வாழ்க்கையைப்பற்றிய அனுமானம் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாகவும், ஒருவருக்கே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறாக தோற்றமளித்தாலும் அவை ஒன்றுமே உண்மையல்ல.,

ஒரு காதலன் தன காதலியிடம் கூறுகின்றான்,
         நீதான் என் வாழ்க்கை நீ இல்லையேல் எனக்கு 
வாழ்க்கையே இல்லை
         மற்றொருவன் கூறுகிறான் பணம்தான் வாழ்க்கை பணம் இல்லாமல் எப்படி வாழ்வது 
         இன்னும் ஒருவர் மானத்தை விட்டு உயிர் வாழ்வதைவிட இறப்பதே மேல் (இப்படிப்பட்டவர்கள் இன்றைய கலாச்சார சூழலில் குறைந்துவிட்டார்கள் என்பதுவேறு)
          ஆன்மீக நூல்கள் நிறையப்படித்த சகோதரர் ஒருவரிடம் கேட்டேன் 
வாழ்க்கை என்றால் என்னவென்று அதற்க்கு அவர் கூறினார் 'அனுபவம்தான் வாழ்க்கை' ஆக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் வாழ்க்கையைப்பார்த்துக்கொண்டிருக்கின்றோம், 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை என்பார்கள், உண்மைதான் ஆனால் அதை நாம் மேலும் நுணுக்கமாக சிந்தித்தாக வேண்டும், ஒரு ஆட்டையோ, மாட்டையோ அல்லது நாயையோ பார்த்து அதன் வாழ்க்கை இப்படி உள்ளது இதன் வாழ்க்கை அப்படி உள்ளது என நாம் எண்ணுவதோ கூறுவதோ கிடையாது.
அப்படி இருந்தால்வேண்டுமானால் நாம் பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை எனலாம். வாழ்க்கை என்பது வாழும் வகை, ஒருவேளை வாழும் வகை மருவி வாழ்க்கையாகி இருக்கலாம், ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு வாழும் வகை தெரியாது, பசி எடுக்கிறதா உண்ணும், காமம் எழுகிறதா கலவி கொள்ளும், உறக்கம் வருகிறதா உறங்கும். னெனில் அவை ஐந்தறிவு ஜீவன்கள் அதற்க்கு வாழ்வதை வகைப்படுத்தத்தெரியாது, ஆனால் ஆறறிவு கொண்ட மனிதனும் வாழ்வை வகைப்படுத்தாமல் வாழ்வது ஆறறிவுகொண்ட மிருகம் என்றே கூறலாம், உண்மையில் குரங்கிலிருந்து பரினமித்தவனே மனிதன் அவன் ஆறறிவு இருந்தும் அதைப்பயன்படுத்தாமல், வாழ்வை வகைப்படுத்தாமல் வாழ்வதை விஞ்ஞான மிருகம் என்றே கூறலாம்,  (Planet of the Apes திரைப்படத்தில் வரும் மனிதக்குரங்கைப்போல........) இப்படியேப்போனால் மனிதனிலிருந்து மீண்டும் குரங்காக பரிணமிக்கலாம்,.... இது எங்கே கொண்டுபோய்விடும் அழிவிற்கு மனித இனத்தின் அழிவிற்கு அதில் நீங்களும் இவனும் அடக்கம். இப்படி மிருகமாகவும் மாறும் வாய்ப்புள்ள நம்மை ஒரு முழு மனிதனாகவோ அல்லது கடவுளாகவோ வாழ நமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுப்பார், வாழக்கற்றுக்கொடுப்பார் அவரே குரு.


அப்படியென்றால் வாழ்க்கைதான் என்ன? 
கவிஞர்  கண்ணதாசன் வரிகளில் 
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் 
வாசல்தோரும் வேதனை இருக்கும், என்றார் 
ஆயிரம் என்னும் எண்ணிக்கையை அவர் உருதிபடக்கூரவில்லை
தோராயமானவார்த்தைதான் அது. அது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படலாமேயன்றி எண்ணிக்கை ஒன்றும்
குறைந்துவிடப்போவதில்லை,